குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 993
குறள் : உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
விளக்கம் : உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 993
Kural: Uruppottal makkaloppu anral veruttakka
panpottal oppatam oppu.
Vilakkam: Utampal ottiruttal makkalotu oppumai anru, poruntattakkap panpal ottiruttale kollattakka oppumaiyakum.