குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 1000
குறள் : பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
விளக்கம் : நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 1000
Kural: Panpilan perra peruncelvam nanpal
kalantimai yaltirin tarru.
Vilakkam: Nalla panpu illatavan atainta perum celvam, pattirak kettal atilulla nalla pal kettup povatu polam.