16. ஜோதிடமே. . . ஜோதிடமே… .
அழைப்பு மணி ஒலித்தது. கதவை
(திறந்தாள் பாத்தீமா. அங்கே ரம்யா நீன்று
கொண்டிருந்தாள். “ரம்யா… நீ எப்போ
வந்தாய்…?” பாத்திமா அக்கா… நான் இன்று
காலையிலதான் பம்பாயில் இருந்து
வந்தேன் அக்கா என்றாள் ரம்யா.
“வா…வா… உள்ளே வா…
அடேயப்பா… உன்ன பார்த்து எத்தனை
வருசமாச்சு.. உன் மாப்பிள்ளை பிள்ளைங்க
எல்லாம் நல்லா இருக்காங்களா…”
“ஆமாக்கா… நல்லா இருக்காங்க… ஒரு குறையும் இல்ல…”
“லராம்ப சந்தோஷம்… உட்காரு…” வரவேற்பறையில் இருவரும்
உட்கார்ந்தார்கள் “வளனுக்கு கல்யாணம் ஆயிட்டூதாமே… அப்படியா…
அக்கா…” என்றாள் ரம்யா, “ஆமாம்… அவனுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு
வருஷமாச்சு… நீதான் கல்யாணத்துக்கு வரலையே…”
“நீங்க கார்டு அனுப்பலையே… ஓ… எல்லாம் மறந்து போச்சு…
வாழ்க்கையே வெறுத்து போச்சு…”
“ஏனக்கா… இப்படி பேசுறீங்க… வளனை கூப்பிடுங்க அக்கா… நான்
பார்க்கனும்…”
“அவன் வளியே யோயிருக்கான், சீக்கிரம் வந்திடுவான்… கனிஷ்டா…
கனிஷ்டா… காபி கொண்டுவா…” என்றாள் பாத்திமா
கனிஷ்டா காபி கொண்டு வந்து மேஜையில் வைத்தாள்.
“இதுதான் மருமகளா… வளனுடைய மனைவியா… ?”
தலையசைத்தாள்
“ஏரொம்ப… ரொம்ப… அழகா இக்கா… வளன் கொடுத்து வைச்சவன்…”
ரம்யா
“கனிஷ்டா… இது ரம்யா… வளன் கூட படிச்சவா… நல்ல நண்பர்கள்…”
என்று அறிமுக படுத்தீனாள் பாத்திமா.
“வணக்கம்”, கனிஷ்டா சரியம்மா… உனக்கு எத்தனை குழந்தைகள்.
பதில் சொல்லவில்லை, கனிஷ்டா பார்வையை திருப்பிக் காண்டாள்.
“இதுவரை இன்னும் குழந்தையில்லை. ரம்யா… வேண்டாத கோயில்
இல்லை கும்பிடாத தெய்வம் இல்லை…” என்றாள் பாத்திமா.
“அஞ்சு வருஷமாச்சே… இன்னுமா குழந்தையில்லை… டாக்டரிடம்
காட்டினீங்களா, எல்லாம் காட்டியாச்சு… இருவருக்கும் ஒரு குறையும்
‘இல்லையாம்”.
“அப்படின்னா.. ஜாதக தோஷம் பார்த்தீங்களா அக்கா…”
“நாங்க கிறிஸ்தவங்க… அதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது…”
“என்னக்கா… இப்படி சொல்றீங்க… இரண்டூ பேருடைய ஜாதகமும்
பொருந்தலைன்னா… இப்படித்தான் அக்கா… ஏதாவது குறை இருக்கும்…”
மெளனம்.
“அக்கா… எனக்கு தெரிந்த ஜோதிடர் ஆதின்னு ஒருத்தர் இருக்கார்…
அவர் கிட்ட நீங்க போனீங்கன்னா… நிச்சயம் பரிகாரம் கிடைக்கும் கைமேல்
பலனும் கிடைக்கும்” என்றாள் ரம்யா.
“அவர் எங்கே இருக்கார்…?” கீழ்பாத்தைக்கு அருகில் இருந்தார். நீங்க.
… உங்க மகனையும் மருமகளையும் கூட்டிட்டு போங்க அக்கா… நிச்சயம்
குழந்தை கிடைக்கும்… என்று உறுதியாக சொன்னாள் ரம்யா.
“யோசித்தாள் பாத்திமா… யோசிக்காதீங்க… அக்கா! ஒரு தடவை நீங்க
போய் பாருங்க நீச்சயமா பலன் கிடைக்கும். சரி… நான் வரட்டூமா அக்கா…”
விடைப்பெற்று சென்றாள் ரம்யா.
மகன் வந்ததும் இந்த யோசனையை சொன்னாள் பாத்திமா, அவனுக்கு
இதில் விருப்பமில்லை.
“வேண்டாம் அம்மா… இந்த ஜோசியம் வேண்டாம். நாம… மணல் மாதா
கோயிலுக்கு இந்த சனிக்கிழமை போயிட்டூ வருவோம்… நீச்சயம் பலன்
கிடைக்கும்…”
“மாதா கோயிலுக்கும் போவோம். ஒரு தடவை இங்கேயும் போய்
பார்ப்போம்…” என்று அம்மா சொன்னாள்.
மறுக்க முடியவில்லை அவனால்… மூவரும் புறப்பட்டு போனார்கள்…
வாருங்கள்… வாருங்கள் என்று முகம் மலர வரவேற்றார் ஜோதிடர்.
“அய்யா… இவளுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை..
அதுதான் உங்களை தேடி வந்தோம்”. என்றாள் பாத்திமா.
“ஜாதக குறிப்பு இருக்கா…”
“இல்லையய்யா…”
பிறந்த தேதி மாதம், வருஷம் நாள், நட்சத்தீரம் இருக்கா…
எழுதி வைத்ததை கொடுத்தாள்.
கொஞ்சம் நேரம் பார்த்தார். விரல்களால் எண்ணினார். வாய்க்குள்
முணு முணுத்தார்… கண்ணை மூடிக் கொண்டார்… தலையை அங்கும்
இங்கும் ஆட்டினார்… எமதுவாக கண்ணை திறந்தார்.
“குரு… சுக்கிரன் வீட்டுல இருந்து குழப்பத்தை ஏற்படூத்துகிறார். இங்கே
யும் ஒரு குழப்பம் இருக்கு.” என்றார் ஜோதிடர்.
“என்ன குழப்பம்…?” பாத்திமா இந்த பொண்ணுடைய ராசி மகரம், நட்சத்திரம்
பரணி இரண்டுக்கும் ஒத்து போகாது… இது பாவச்செயலில் வந்தது…
“கொஞ்சம் ஒதளிவா சொல்லுங்கய்யா… என்ன பாவச் செயல்”.
இந்த பொண்ணு இதுக்கு முன்னால வயிற்றில் உருவான ஒரு கருவை
அழச்சிருக்கா… இந்தப் பாவச் செயலால்… இவளுக்கு இப்போது குழந்தை
பிறக்காது அதற்கு பரிகார பூசை நடூச்சாம பூசை வைக்கனும்…
எல்லோரும் அதிர்ந்தார்கள் “என்ன… குழந்தையை அழிச்சிருக்காளா…
எப்போ…?”
என்று கனிஷ்டாவை கொடூரமாக பார்த்தாள்.
“இல்ல… இல்ல… இது இல்லவே இல்ல…
இல்லை… பொய்… பொய்…” வாய்விட்டு அழுதாள் கனிஷ்டா.
“அப்போ… நான் பாய் சொல்றேனா… ஜோதிடம் பாய் சொல்லுமா…
அம்மா இதை நீங்க வீட்டுல போய் நல்லா யோசிச்சு… முடிவுக்கு வாங்க…
பரிகார பூசை நடத்தனுமுன்னா… நாப்பதாயிரம் செலவாகும்… இப்போ…
போயிட்டு வாங்க…” எழுந்தார் ஜோதிடர் ஆதி.
“அம்மா… எழும்பு அம்மா… இதுக்குதான்… ஜோதீடம்
வேண்டாமென்று சொன்னேன்…”
வளன் அவசரப்பட்டு வளியே வந்தான் எல்லோரும் இறுகிய மனதோடு
வீட்டிற்கு வந்தார்கள்.
மறுநாள் மகனை தனியே கூப்பிட்டாள் பாத்திமா.
“ஜோதிடர்… சொன்னது என் காதீலே இன்னும் ஒலிச்சுகிட்டே இருக்குடா…
. எப்போடா… அவா குழந்தையை கருவிலே கொன்னா…”
“அப்படிவயல்லாம் ஒன்னும் இல்லம்மா… ஜோதிடத்தை நம்பாதே
அம்மா… வளன்”.
“ஒரு வேளை கல்யாணத்துக்கு முன்னால அப்படி ஏதும் நடந்திருக்குமோ.
அம்மா… நிறுத்து…” என்று கத்தினான் வளன்.
“பொறுடா… பொறு… இப்போ… எந்த முடிவுக்கும் வரவேண்டாம்…
கொஞ்ச நாள் அவளை அவள் அம்மா வீட்டுக்கு போகச் சொல்லு…”
“எதுக்கு அம்மா…?”
சொல்வதை கேளூ… அம்மா
வீட்டுக்கு அனுப்பிவிட…
“அம்மா… இது அவளை குற்றம்சாட்டூவது போல் இருக்காதா…?”
“சொன்னதை செய்… அல்லது உன் விருப்பம் போல் செய்…” என்று
சொல்லி உள்ளே போனாள் பாத்திமா.
கனிஷ்டா… தாய் வீட்டுக்கு அனுப்பபட்டாள்.
ஒரு மாதம் ஆனது…
“அம்மா… அம்மா… இங்கே வாயேன்” சத்தம் போட்டு தாயை
கூப்பிட்டான் வளன்.
“என்னடா…” வந்தாள் தொலைகாட்சியில் செய்தி கேட்டு கொண்டிருந்த
வளன்… “செய்தியை கேள்…” என்று சத்தமாக வைத்தான்.
“கீழ் பாத்தையில் இருக்கும் ஆதி என்ற போலி ஜோதிடர் மக்களிடம்
பாய் சொல்லி பணம் பறித்து கொண்டிருந்தார் தன்னிடம் வருகிற
மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி, ஏமாற்றி பணம் பறித்து உல்லாச
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். அவரை காவல்துறை கைது செய்து
இழுத்து செல்லும் காட்சியை காணுங்கள்…”
தொலைகாட்சியை பார்த்து அதிர்ந்து போனாள் பாத்திமா. அப்படி
என்றால் கனிஷ்டா மீது சொல்லப்பட்ட குற்ற சாட்டூ…? வளன்…
தொலைகாட்சியை நிப்பாட்டு… போய் கனிஷ்டாவை கூட்டிட்டூவா…
சரியம்மா… புறப்பட்டான். நில்… நானும் வருகிறேன் என்று இருவரும்
புறப்பட்டு சென்றார்கள்.
வாங்க… வாங்க… இருவரையும் வரவேற்றாள் கனிஷ்டாவின் தாய் மேரி.
கனிஷ்டாவும் மரியாதையாக