S A Pitchai Thoppuvilai – தோப்பு எஸ்.ஏ.பிச்சை

s-a-pitchai
தோப்பு எஸ்.ஏ.பிச்சை பற்றி,

இவர் சுவாமிதாசன், சவரியம்மாள் மகனாக 5ஆம் தேதி மார்ச் மாதம் 1955யில் திருநெல்வேலி மாவட்டத்தில் தோப்புவிளை என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவர் பள்ளிப் பருவத்திலுருந்து தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். 1972யில் தனது பி.யு.சி படிப்பை சாயர்புரம் போப்ஸ் கல்லூரியில் முடித்த பின்னர், இவருக்கு தபால் துறையில் வேலை கிடைத்தது.

தமிழ் கலை பயணத்திலும் மற்றும் எழுத்துவுலகில் முதன் முதலாக, 1978யில் இவரின் சிறுகதை தினத்தந்தியில் பரிசு கதையாக வெளிவந்தது.

தமிழில் புலமை பெற்ற இவர், தொடர்ந்து பல கதைகள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதினார். அவை அனைத்தும் முன்னணிப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்தன.

நாடகங்கள் எழுதுவது மட்டும் இல்லாமல், அதை இயக்கி பல மேடையில் அரங்கேற்றி பாராட்டுக்களும், பரிசுக்களும் பெற்றவர்.

இவர் 2015யில் தபால் துறையில் இருந்து ஓய்வு பெற்றாலும், தனது தமிழின் கலை பயணத்தின் அடுத்த கட்டமாக தனது அனைத்து கவிதைகளும், உள்ளடக்கியதாக முதல் நூல் “மேகம் விடும் தூது” 2018யில் வெளியிட்டார்.

2021யில் இவரின் அனைத்து சிறுகதைகளும், உள்ளடக்கியதாக இரண்டாவது நூலாக “தமிழ் அழகு”  வெளிவந்துள்ளது.

இவரின் புத்தகங்கள்

மேகம் விடும் தூது – 2018

s-a-pitchai-magam-vidum-thudu-book-cover

தமிழ் அழகு – 2021

s-a-pitchai-tamil-azhagu-book-cover

இவரின் தமிழ் பயணம் தொடர, வாழ்த்துகின்றோம்.