Siru kathai in tamil | காதல்‌ பரிசு – ஜவுளி

Categories சிறுகதைகள்Posted on
siru kathai in tamil-kathal‌ parisu-javuli
Share with :  

2. காதல்‌ பரிசு

ஜவுளிக்‌ கடை ரங்கன்‌

 

கேட்டான்‌.  “ஜாக்கட்‌ துணி யாருக்கண்ணே?”

“எல்லாம்‌ நம்மாளுக்குத்தான்‌…!

துரை சொன்னான்‌”.
“நம்மாளு என்றால்‌…!”

“அதுதாண்டா….. கோடி வீட்டு பாமா….!”

“அந்த மலேசிய பாமாவா….! என்று வாயைப்‌ பிளந்தான்‌”.
“அவளேதான்‌… வரட்டூமா!”

“டீக்கடை முத்து கேட்டான்‌”.

“எங்கண்ணே போயிட்டு வர்றீங்க?”

“ஜாக்கெட்‌ துணி ஒண்ணு எடுத்து வாரேன்பா….!”

“யாருக்கு?”

“தரியாதா உனக்கு! அய்யாவுடைய பெர்சனாலிட்டியை பற்றி என்ன
நினைச்சே?” காலரை தூக்கி விட்டுக்‌ கொண்டான்‌.

“அண்ணே! புளியங்‌ கொம்பாத்தான்‌ பிடிச்சிருக்கீங்க… விடாதீங்க…”

“நீ ஒழுங்கா… டீயை போடு… வரட்டுமா?”

நண்பன்‌ ரவி கேட்டான்‌.

“எங்கேடா போயிட்டு வாறே?”

“என்‌ காதலி பாமாவுக்கு பரிசு கொடுக்க ஒரு ஜாக்கெட்‌ துணி
எடுத்துட்டு வாரேன்‌”
“புளுகாதேடா… அவளாவது உன்னைக்‌ காதலிப்பதாவது…?”

“இதோ பாருடா… மடையா… இந்த ஜாக்கட்‌ துணியை என்‌ கையாலே
தைச்சுஇன்றைக்கே அவளுக்கு கொடுக்கிறேன்‌. நாளைக்கு அவா
போட்டுட்டு வரும்‌ போது நீயே பார்த்துக்கடா…. வரட்டுமா?”

மாருதி வந்து நின்றது மயிலாக இறங்கி வந்தாள்‌ பாமா.

“எய்லர்‌!”

“அம்மா….” துரை ஓடி வந்தான்‌

“ஆமாமா. ஆனா… ஒரு சிறு தவறு நடந்து போச்சு…”
“என்ன?”

“உங்க ஜாக்கட்‌ துணியோட இன்னொரு ஜாக்கெட்‌ துணியின்‌ அளவை
யும்‌ வைத்திருந்தேன்‌. புதுப்பையன்‌ அந்த அளவில்‌ உங்க ஜாக்கட்டை

தைச்சுட்டானம்மா!”
“பரவாயில்லை… என்‌ அளவுக்கு தக்கபடி மாற்றிக்‌ கொடு”

“எல்லாவற்றையும்‌ சரி பண்ணிட்டேன்‌…மார்பு அளவை மட்டும்‌
சரிப்படுத்த முடியலையம்மா…”

“இப்போ என்ன செய்யப்போறே”

“உங்க துணிக்கு பதிலா அதே ரகத்துல நானே ஒரு துணி எடுத்து
தைச்சு வைத்திருக்கேன்‌. கலர்தான்‌ கொஞ்சம்‌ மாறி போச்சு… கொடுத்தான்‌”.

“சரி பரவாயில்லை… வரட்டு மா”

“அவள்‌ காரை நோக்கி விரைந்தாள்‌”.

(தான்‌ கொடுத்த காதல்‌ பரிசை அவள்‌ வாங்கி சென்று விட்டதைப்‌ போல்‌
கார்போன தீசையையே பார்த்துக்‌ கொண்ருந்தான்‌ அந்த அப்பாவி.