Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Siru kathai in tamil | குடி… குடியைக்‌ கெடுக்கும்‌ – தனியார்‌

Siru kathai in tamil-kudi kudiyaik‌ kedukkum‌-thaniyar‌

18. குடி… குடியைக்‌ கெடுக்கும்‌

 

 

 

 

 

 

தனியார்‌ வங்கி ஒன்றில்‌ பணிபுரிந்த

ஜென்ஸி, வேலை முடிந்து வீட்டிற்கு
வ நடந்து வந்து கொண்டிருந்தாள்‌.

அது… |

இடையில்‌… டாஸ்மாக்‌ கடையிலிருந்து
வெளியே வந்த மேரியைக்‌ கண்டாள்‌.

“மேரி அக்கா… என்ன டாஸ்மாக்‌

கடையிலிருந்து வர்றீங்க…” கிண்டலாகக்‌
கேட்டாள்‌.

“ஒண்ணுமில்ல ஜென்ஸி, எங்க அக்கா கணவர்‌ அங்குதான்‌ வேலை
பார்க்கிறார்‌. அதுதான்‌ பார்த்துட்டு வாரேன்‌…”
“ஏன்‌… என்ன விசயம்‌?”

“எங்க அக்கா பிள்ளைக்கு சுகமில்லை… அவன ஆஸ்பத்திரியில
சேர்த்திருக்கு… வேவேலை முடிஞ்சதும்‌ ஆஸ்பத்திரிக்கு வாங்கன்னு
சொல்லத்தான்‌ வந்தேன்‌…”

“ஏனக்கா…கைப்பேசியில்‌ சொல்லி இருக்கலாமே…”
“கைப்பேசி அவர்‌ கொண்டு வர மறந்திட்டார்‌…”
“இந்தக்‌ காலத்தில்‌ கூட கைப்பேசியை மறப்பாங்களா… என்ன…?”

“நேத்து வீட்டில… அக்காவுக்கும்‌ அவருக்கும்‌ நடந்த சண்டையில…
எல்லாம்‌ மறந்து போயிருக்கும்‌ ஜன்ஸி…” என்றாள்‌ மேரி.

ய 2 ்‌ . ர
என்ன… உங்கக்கா… சண்டை போட்டாங்களா…

“ஆமாம்‌ ஷென்ஸி… அக்காவுக்கும்‌ அவள்‌ கணவருக்கும்‌ தினமும்‌
சண்டைத்தான்‌… அவள்‌ கணவர்‌ டாஸ்மாக்‌ கடையில வேல பார்க்கிறது

அவளுக்குக்‌ கொஞ்சம்‌ கூட பிடிக்கல…”

“ஏன்‌… அது அரசாங்க வேலைதானே….”

“அரசாங்க வேலைதான்‌…. நீ ஊத்திக்‌ கொடுக்கிறதுல… எத்தனை
குடும்பம்‌ அழந்து நாசமா போயிருக்கும்‌… இந்த பாவமும்‌ பழியும்‌ நம்மள
சும்மா விடாது என்று அக்கா எப்பவுமே அத்தான்‌ கிட்ட சண்டை போடுறா…”

“என்ன மேரியக்கா… அரசாங்கம்தானே இதை நடத்து… இவர்மேல்‌
எப்படி குற்றம்‌ சொல்ல முடியும்‌…?”

“அது அக்காளுக்குப்‌ புரியல… குடி குடியைக்‌ கெடுக்கும்‌ என்று போர்டூ
போட்டுக்கிட்டே குடியைக்‌ கெடுக்கிறியே சண்டாளா… என்று அத்தானைத்‌
திட்டும்‌! ஏசும்‌! அத்தான்கூட முகம்‌ கொடுத்துப்‌ பேசாது…”

“அதுதான்‌ இப்போ… அரசாங்கமே கடையை மூட ஆரம்பிச்சிட்டாங்களே…
அதுவரை கொஞ்சம்‌ பொறுத்துக்க வேண்டியதுதானே…” என்றாள்‌
ஜென்ஸி.

“சொன்னால்‌ அக்காளுக்குப்‌ புரியாது…. இந்தப்‌ பாவமும்‌ பழியும்தான்‌
நம்ம பிள்ளைகளுக்கு சாபக்‌ கேடா… நோயா வந்து பத்திகிட்டூடி… என்று
சொல்லி… சொல்லி அமுறா… எனக்கும்‌ அதுதான்‌ சரின்னு படுது…”
என்றாள்‌ மேரி.

“மேரியக்கா… ஒண்ணும்‌ கவலைப்படாதீங்க… மாதாவிடம்‌ இதைப்பற்றிப்‌
பேசுங்க. உங்க அக்காளுக்கு அமைதியும்‌ நிம்மதியும்‌ நீச்சயம்‌ கிடைக்கும்‌…
சரியக்கா நான்‌ வரட்டுமா?

“போயிட்டு வாம்மா?”

சிந்தனை செய்து கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்‌ ஜென்ஸி.

“அம்மா ஜென்ஸி! கல்யாண தரகர்‌ வந்திருக்கிறார்‌. இப்படி உட்கார்‌!”
என்றார்‌ அப்பா சேசுதுரை.

“இப்படி என்கிட்ட உட்காரும்மா” என்றாள்‌ அம்மா மரியம்மாள்‌.

வரவேற்பரையில்‌ எல்லாரும்‌ அமைதியாக உட்கார்ந்தார்கள்‌.

“தரகர்‌ ஐயா, நீங்க சொல்லுங்க. ஏதாவது அரசு வேலை பார்க்கிற
மாப்பிள்ளை இருந்தால்‌ சொல்லுங்க…” என்றார்‌ சேசுதுரை.

“மாப்பிள்ளை ஐந்தடி ஒன்பது அங்குலம்‌… நல்ல சிவப்பு… அழகுன்னா
அழகு! சும்மா சினிமா ஸ்டார்‌ மாதிரி… அவ்வளவு அழகு! ஒத்தைக்கோர்‌
புள்ள… ஏகப்பட்ட சொத்து… ஒரு பிக்கல்‌ புடங்கல்‌ ஒண்ணுமில்ல…
குணத்துல தங்கம்‌! கட்ட பழக்கம்‌ ஏதும்‌ கிடையாது. பீடி, சிகஏரட்‌
குடிக்கிறவங்கள கண்டா எட்டி நீன்னுதான்‌ பேசுவார்‌! குடி… தண்ணிய தவிர

வேற எதுவும்‌ குடிக்க மாட்டார்‌. அவ்வளவு சுத்தம்‌! நான்‌ பார்த்ததீலே…
ஒன்னாம்‌ நம்பர்‌ வரன்‌ இது! நீங்க கொடுத்து வைச்சிருக்கணும்‌. உங்கப்‌
பொண்ணு போன பிறவியில தவம்‌ செஞ்சிருக்கணும்‌…”

“அது சரி தரகர்‌ ஐயா… மாப்பிள்ளை என்ன வேலை செய்யிறாரு…”
என்றார்‌ சேசுதுரை.

“அரசாங்க வேலைதாங்க…”

“அரசாங்க வேலைதான்‌. என்ன வேலைன்னு விளக்கமா சொல்லுங்க…”
என்றாள்‌ மரியம்மாள்‌.

“டாஸ்மாக்‌ கடையிலே சேல்ஸ்‌ மேனா இருக்கிறார்‌. அரசாங்க சம்பளம்‌…
என்றார்‌ தரகர்‌.

“வேண்டாம்‌… வேண்டாம்‌… இந்த வரன்‌ வேண்டாம்‌… நீங்க போயிட்டு
வாங்க. வணக்கம்‌!” என்ற ஜென்ஸி வேகமாக உள்ளே சென்றாள்‌.

அம்மாவும்‌ அப்பாவும்‌ ஒன்றும்‌ புரியாமல்‌ விழித்தார்கள்‌. தரகர்‌ நடையைக்‌
கட்டினார்‌.

Exit mobile version