5. நளினியுடன் ஒரு போட்டோ
“மைடியர் ஸ்டூடன்ஸ்…! இன்றைக்கு நமது
ராஜா அவர்கள் ஒரு புதிய சகாப்தத்தை உண்டு
பண்ண போகிறார் என்பதனை மிகவும் மகிழ்வுடன்
தெரிவித்து கொள்கிறேன்…” என்று நவநாகரீக
மாணவர்களிடையே… மேஜை ஒரு தட்டூதட்டி
ரஜினி ஸ்டைலாக சொன்னான் குப்பி கிருதா
பாஸ்கு.
“என்ன நமது அப்பாவி ராஜாவா… ஆச்சரியமாக
இருக்கிறதே….! என்ன புதிய சகாப்தத்தை ஏற்படு
(த்த போகிறார்? கிளியோபாட்ராவை கல்யாணம்
கட்ட தயார் என்று சொல்லிவிட்டாரோ…?”
என்று யானைக்கால் குழல் சட்டை விஜி
கேட்டான்.
அனைவரும் ‘கொல்’ என்று சிரித்தார்கள்
அமைதி பெற ஒரு நிமிடம் பிடித்தன.
டேய் நீ ஒரு மண்டு! நம்ம ராஜா…. அச்சம்
நாணம் மடம் பயிர்ப்பு என்ற நான்கு
குணங்களினால் வளர்ந்தவன் அவனிடம் போய் நேரிடையாவே
கல்யாண பேச்சை எடுக்கிறாயே… அவனுக்கு வவட்கமாக இருக்காது….!
என்று வெட்கபடூவது போல் அபிநயம் பிடித்தான். சோடா பாட்டில் ராஜன்.
மீண்டும் அதே சிரிப்பு… ஒரே கும்மாளம்! “அறிவில் விளைந்து திளைத்த
மாணவர்களே நான் சொல்வதைக் கவனியுங்கள். நமது ராஜா… நளினி..”.
அறுவை மன்னன் முடிக்கும் முன்பே காஷ்மீர் ஹிப்பி முந்திக் காண்டான்….
“என்ன ராஜாவை நளினி கற்பழித்து விட்டாளா….? இது அநீயாயம்!
அக்ரமம்!” என்று கூக்குரலிட்டான்.
“இது பெருத்த அநியாயம்! மான நஷ்ட வழக்கு போட வேண்டும்” என்று
கத்தினான் ஆந்தைவிழி அழகன். மீண்டும் பலமாக சிரித்தார்கள்.
பலத்த கைத்தட்டல்! ‘ராஜா…. ஓமை ராஜா….’ என்ற பரிதாபக் குரலை
எழுப்பினார்கள்.
“சைலன்ட்! சைலன்ட்….” குப்பி கிருதா மாணவர்களை
சமதானப்படுத்தினான்.“நான் உசால்வதை காதுகளில் துளை செய்து
கேளுங்கள்… ராஜா நமது கிளாஸ்மேட் நாட்டிய அழகி நளினியோடூ
சேர்ந்து ஒரு போட்டோவை எடுத்து தந்து நூறு ரூபாய் பரிசை தட்டிச்
செல்லஆவலுடன் காத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து
கொள்கிறேன்…”
என்று எல்லோரும் பருத்த கூக்குரலிட்டனர். எத்தனை
நேரம்தான் தவளை கத்தி கொண்டிருக்க முடியும்…?
“போட்டா எடுத்து தரவில்லை என்றால்….?” ஒரு ஒடிசல் மாணவனின்
சந்தேக கேள்வி.
வழக்கம் போல் ராஜாவை பழனி மொட்டையடித்து விட வேண்டியதுதான்….
விஜி கூறவும் இதற்கு முன்னால் பந்தயத்தில் தோற்ற மாட்டை
(தலைவர்கள் தலையில் கை வைத்து பார்த்து கொண்டார்கள்.
“நண்பர்களே… ஆண் வர்க்கத்தின் மூலமாக ஒரு சின்ன வேண்டுகோள்…
‘இந்த போட்டோவில் ராஜா தலை நிமிர்ந்தே இருக்க வேண்டும்…” என்று
ரிப்பன் கட்டிய ஆணழகன் கூறினான்.
மீண்டும் ஒரு கலகலப்பு… சிரிப்பு கும்மாளம்! ராஜா அமைதியாகவே
இருந்தான்… எபபண்களுடன் விளையாடும் இந்த திருவிளையாடல்களளல்
லாம் அவனுக்கு கொஞ்சம்கூட பிடிக்காது. ஏன் அவர்கள் சொன்னதுபோல
பெண்களை தலை நிமிர்ந்தே பார்க்க மாட்டான்.
இப்போது இந்த பந்தயத்தில் போட்டியிட வந்திருப்பதற்கு காரணம்….
அவனது வறுமை! இந்த உலகில் அவனது சொந்த பந்தமமல்லாம்
ஏழ்மையும்… வறுமையும்தான்!
சின்ன வயதிலேயே…. அவனை அனாதையாக்கிவிட்டூ பெற்றோர்கள்
இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் ராஜா எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு
பஞ்சுமில்லில் இரவு நேர வேலை செய்து இதுவரை படிப்பையும்
வயிற்றையும் கழுவி விட்டான்.
இன்னும் ஒரே மாதம். அவன் பட்டதாரி ஆகிவிடுவான். இப்போது ஒரு
மாத காலமாக அந்த மில்லில் ஸட்ரைக் நடந்து கொண்டிருக்கிறது.
பரீட்சைக்கு பணம் கட்ட வேண்டும். வேறுவழியில்லை! நன்றாக யோசித்து
ப் பார்த்தான். இந்த பந்தயத்தில் சேர்வதைவிட வேறு வழியில்லை என்று
நினைத்தான். எப்படியாவது அந்த பெண் நளினியிடம் தன் வறுமையைச்
சொல்லி தான் வற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இதை
ஒப்புக் கொண்டான். அந்தப் பெண் எப்படி இருப்பாளோ….?
கடற்கரையில் இனிய தென்றலில் மிதந்து இருந்து ராஜா…. நளினியே
தன்னை நோக்கி வருவதைக் கண்டு பெரிதும் அதிசயத்தான். பழம் நழுவி
பாலில் விழப்போகிறதா….? இல்லை பாலையே கவிழ்க்கப் போகிறதா….?
புரியாமல் வைத்த விழி வாங்காமல் பார்த்தான்.
நளினி பக்கத்தில் வந்து ஒருமுறை ராஜாவை பார்த்தாள். ராஜா பயந்தே
போய்விட்டான்.
“ராஜா…. உங்களிடம் எகாஞ்சம் பேசவேண்டும்…. இப்படி
உட்காரலாமா…..’ தி
யாழ் இசைக்கவில்லை….! பேசியவள் அவள்தான்! செவிக்கு ஊட்டப்பட்ட
இன்பம் ஒரு கணம் உடல் முழுவதும் பரவி நின்றது. இனிய குரலில்
தன்னிலை மறந்த ராஜா. ஒன்றும் புரியாமலேயே தலையசைத்துவிட்டான்.
சற்று தூரத்தில் நளினி, நளினத்தோடூ அமர்ந்தாள். இளங் காற்றினில்
அவளது கேச சுருள்கள் கன்னக் கதுப்பினில் துள்ளி விளையாடின.
ஒய்யிலாக ஒதுக்கி விட்டுக் கொண்டாள். மிதந்து வருசேலையும் ஒழுங்கு
படுத்திக் காண்டாள். இதழ்களை நாவினால் நனைத்துக் காண்டாள்
‘இதுவரை யாரும் பேசவில்லை.
“ராஜா…. உங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மதிப்பும்
மரியாதையும் உண்டு. அந்த நல்லலண்ணத்தோடுூதான் உங்களிடம் ஒரு
உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன்…” என்றாள்.
ராஜாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னிடமிருந்து உதவியா….?
அப்படி என்ன இருக்க முடியும்? ராஜா முழுமையாக முதல் தடவையாக
அவளைப்பார்த்தான்.
அவள் கண்கள் கலங்கியிருந்தன. தெளிவான முகத்தில் சோகம் கப்பிக்
கிடந்தது. சோகத்தின் வடிவாக இதழ்களை மடித்து கடித்திருந்தாள்.
“முடிந்தால் செய்கிறேன்” என்று அளவோடு இரண்டு வார்த்தையை
மட்டும் சொன்னான்.
“நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் வந்து இருக்கிறேன்
ராஜா. நீண்டநாள் நோயாளியான எங்கம்மைத் தவிர வேறு யாரையுமே
எனக்குத் தரியாது. இருக்கிற வசதியை வைத்து இதுநாள் வரை
அம்மாவுக்கு எவ்வளவோ…. வைத்தீயம் செய்து பார்த்தேன். கொஞ்சங்கூட
பலனளிக்கவில்லை. நாளுக்குநாள் அம்மாவின் நிலைமை மோசமாகி
கொண்டே வந்தது… இனி எதுவுமே முடியாது…. அம்மா விரும்பியதை
செய்யலாம் என்று டாக்டரும் சொல்லிவிட்டார்….. என்று பாதியில்
நிறுத்தினாள்.
ராஜா அவளைப் பார்த்தான். அவள் வேறு பக்கம் திரும்பி அழுது
கொண்டிருந்தாள். காஞ்ச நேரம் அமைதி. மீண்டும் சொன்னாள்.
“ஒவ்வவாரு நிமிடமும் அம்மா என்னையே நினைத்து பெருமுகிறாள்.
எங்கே என்னை தனியாகவிட்டூ போய்விடுவேனோ…. என்று துடிக்கிறாள்.
ஒருத்தன் கையில் பிடித்து கொடுத்துவிட்டால் நிம்மதியாக போவேன் என்று
அழுகிறாள் ஒவ்வாரு நிமிடமும் எனக்காக புழுவாய் துடிக்கிறாள்.
கொஞ்சம் கூட அவளுக்கு நிம்மதியே இல்லை…. ராஜா நீங்க காஞ்ச
நேரம் எங்கம்மாவுக்கு மருமகனாக…. அதாவது என்னை கல்யாணம்
செய்யப்போகும் கணவனாக அம்மாவின் முன் உறுதியளிக்க வேண்டும்.
வவறும் நடிப்புதான்! வேறு எந்தவிதமான தப்பிதமும் இல்லை.
எங்கம்மாவின் ஆத்ம திருப்திக்காக இதை செய்வீர்களா… ராஜா?”
என்று பரிதாபமாக ராஜாவை வேண்டி நீன்றாள்!.
ராஜா கொஞ்சம் பலமாகவே யோசித்தான் வெறும் நடிப்புதானே? இந்த
உதவியை செய்து பின்னால் போட்டோவை பற்றி கேட்கலாம். செய்த
உதவிக்கு மறுஉதவி செய்யாமலா போவாள்.
“என்ன ராஜா…. யோசிக்கிறீர்கள்? ஒவறும் நடிப்புதான் வேறு எந்தவித
நோக்கமும் இல்லை….!” மீண்டும் ககஞ்சினாள்
அது சரி நளினி… உங்கம்மா முன்னாலேயே உங்களுக்கு தாலி கட்ட
சொன்னால்…. ராஜா இத்தனை பெரிய வார்த்தையை கேட்டாள்.
நளினி லமதுவாக சிரித்தாள் “கட்டிவிடுங்கள்! விருப்பம் இல்லாததை
எப்பவும் போட்டுக் கொள்ள மாட்டேன்” என்றாள்.
“ராஜா…. என்னை நீங்கள் நாங்கள் என்று கூப்பிடவேண்டாம்….
உரிமையோடு அழைக்க வேண்டும். அப்போதுதான் அம்மா நம்புவாள்…”
இருவரும் சிரித்து கொண்டார்கள்! “அம்மா… அம்மா…. இதோபார்
உன் மருமகன் வந்திருக்கிறார்”. என்று தாயிடம் உரிமையோடு
அறிமுகப்படுத்தீனாள் நளினி.
பல நாள் நோய்வாய்ப்பட்டு துவைந்து கிடந்த அந்ததாய் எழும்பவும்
முடியாமல் அசையவும் முடியாமல் எமதுவாக தலையை திருப்பி “வாங்க
தம்பி…. இப்படி வாங்க….!” என்று அடிக்குரலில் அழுத்தம் இல்லாமல்
வரவேற்றாள்.
ராஜா மெதுவாக வந்து அந்ததாயின் பக்கம் நீன்றான்.
“எங்கே ஆண்டவன் என்னை கைவிட்டு விடுவானோ என்று பயந்தேன்.
ஆண்டவன் என்னை அப்படியெல்லாம் சோதிக்கவில்லை. ஆண்டவனாகத்
(தான் உங்களை அனுப்பியிருக்கிறான். நளினி உங்களை தன் கணவனாக
தேர்ந்ைடுத்திருப்பதால் உங்களைப் பற்றி நான் அதிகமாக கேட்க
வேண்டியதில்லை. நீங்க நல்லவங்களாகத்தான் இருப்பீங்க…” தொடராக
பேசியதால் அவளுக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. நளினி ஓடிவந்து
நெஞ்சை தடவி கொடுத்தாள்.
“அத்தை நீங்க இப்படி கஷ்டப்பட்டு பேச வேண்டாம். இப்போது ஒன்றும்
ஓடிப்போகவில்லை. பிறகு பேசிக் கொள்ளலாம். நீங்கள் நிம்மதியாக
படுத்து கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார் அவர்
வந்தால் உங்க நோய் பத்து நாளில் பறந்தே போய்விடும். இப்போதே போய்
அவரை கூப்பிட்டூட்டு வருகிறேன்…” என்று ராஜா புறப்படப் போவது போல்
ஒரு பாவனை செய்தான்.
“வேண்டாம் தம்பி! நீங்கள் எங்கும் போக வேண்டாம். இனி எனக்கு
உயர் மேல் ஆசை எதற்கு? நான் நினைத்தபடி நடந்துவிட்டது. யாரும்
எங்கும் போக வேண்டாம்! நான் இப்போதுதான் மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறேன்!” என்று பெரும் பாரத்தை இறக்கிவிட்டாள் போல நீம்மதீயாக
மூச்சுவிட்டாள். அன்பு மகளையும் பருமையோடு பார்த்தாள்.
“நளினி! நீ ஏன் கண் கலங்குகிறாய்? இஒதன்ன அசடூ மாதிரி
அழுகிறாய்? இந்த இன்பகரமான நேரத்தில் கண்ணீர்விடக் கூடாது.
வந்திருக்கும் உறவினருக்கு களைப்பாற ஏதாவது கொடுக்க வேண்டும்
என்பதனை மறந்து விட்டாயோ! போ! போய் பாலாவது கொண்டுவந்து
கொடு!”
நளினி பால் கொண்டு வந்து ராஜாவிடம் கொடுத்தாள்.
ராஜாவுக்கு நல்லபசி! காலையிலிருந்து இதுவரை ஒன்றும் இல்லை.
பாலை வாங்கி மடக்மடக்கென்று பாதீதான் குடித்திருப்பான்…’நறுக்’ கன்று
கால் பருவிரலால் நளினி அவனது காலில் கிள்ளினாள். குடிப்பதை
நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். பாதியை எனக்கு கொடுங்கள் அம்மா
அதைத்தான் விரும்புகிறாள் என்று கண்ணசைவிலே சொன்னாள்.
சங்கடப்பட்டுதான் பாதிபாலை நளினியிடம் கொடுத்தான். பாலை
இருவரும் பங்கிட்டு குடிப்பதைப் பார்த்ததும் அந்த தாயின் உள்ளம்
மிகவும் குதூகலித்தது.
நளினியைத் தீனக்குரலில் பக்கத்தில் அழைத்தாள் அந்த தாய்.
அவளது கையை ராஜாவின் கையோடூ இணைத்தாள். ஆனந்த
கண்ணீர் வபருக்கடுத்து மணமாலையாக விழுந்தது. திடீஏரன்று ஒரு
வேகத்தில் எழுந்தாள். “என் கண்மனியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்
கண்கலங்காமல் பார்த்து கொள்ளுங்கள்” என்று சொல்லி இணைந்திருந்த
கைகளில் முத்தமிட்டாள். அப்படியே சாய்ந்து விட்டாள்.
உடல் என்ற கூட்டிலிருந்து உயிர் என்ற பறவை பறந்து போய் விட்டது.
[ய
“அம்மா….!” என்ற வீரிட்டாள் நளினி. அம்மாவின் மீது விழுந்து புரண்டு
புரண்டு அழுதாள்.
ராஜாவுக்கும் தன்னையறியாமலே கண்கள் கலங்கி விட்டன. மெதுவாக
குனிந்து நளினியை தூக்கி நிமிர்த்தினான். நீ கண் கலங்க கூடாது
அதுதான் அம்மாவின் விருப்பம்! என்று சொல்லிக் கொண்டே உரிமையோடு
அவளது கண்ணீரைத் துடைத்தான். அவள் அவனது மார்பில் சாய்ந்து
கொண்டு விம்மி விம்மி அழுதாள் இனிதான் ஆயிரம் போட்டோக்கள்
உருவாகுமே…!