Sirukathaigal | நாலு முக்கு சந்தி – பஸ்‌

Categories சிறுகதைகள்Posted on
Sirukathaigal-nalu mukku santhi-bus‌
Share with :  

13. நாலு முக்கு சந்தி…

பஸ்‌ போய்க்‌ கொண்டிருந்தது.

பக்கத்திலிருக்கும்‌ தாத்தாவை ஒரு தடவை
திரும்பிப்‌ பார்த்தேன்‌.

அவர்‌ நிமிர்த்தி வைக்கப்பட்ட பொம்மையாட்டம்‌

ரீ] ஆடாமல்‌ அசையாமல்‌ கம்பியை கெட்டியாகப்‌

டித்துக்‌ ககாண்டு இருந்தார்‌.

தன்‌ மகள்‌ வீட்டுக்குப்‌ போக வேண்டும்‌ என்று அப்பாவிடம்‌ ஒரு வாராமாக
சண்டை.

அப்பா, ‘தாத்தாவைக்‌ கொண்டு விட்டூட்டூ வா்‌ என்று எனக்குக்‌
கட்டளையிட, நானும்‌ அவர்‌ கூட அந்த சிறிய கிராமத்துக்குப்‌ பஸ்ஸில்‌
போய்க்‌ கொண்டிருக்கிறேன்‌.

அந்தக்‌ கிராமத்திற்குள்‌ பஸ்‌ போகாது. ஒரு கிலோ மீட்டர்‌ தூரம்‌ நடந்துதான்‌
போக வேண்டும்‌. நல்வலடி வழியாக ஆத்தங்கரைக்குப்‌ போகும்‌ பஸ்ஸில்‌,
நாலு முக்குச்‌ சந்தியில்‌ இறங்க வேண்டும்‌. பின்பு மாட்டு வண்டி ஏதேனும்‌
வந்தால்‌ அதில்‌ தாத்தாவை ஏற்றிக்‌ கொண்டு ஊருக்குப்‌ போக வேண்டும்‌.

ஆனால்‌… கண்டிப்பாகச்‌ சொல்லி விட்டார்‌ பஸ்‌ கண்டக்டர்‌. இது விரைவு
வண்டி நாலு முக்கு சந்தியில்‌ நீற்காது என்று!

என்ன செய்வது என்று எனக்கு விளங்கவில்லை… பஸ்ஸை விட்டு
தாத்தாவை இறக்குவதே பெரும்பாடு. அதுவும்‌ நாலு முக்கு சந்தியில்‌ பஸ்‌
நிற்காதாமே!

எப்படி தாத்தாவை இறங்குவது? எப்படி வீடு கொண்டூ போய்‌ சேர்ப்பது?
தீவிரமாகச்‌ சிந்தித்த எனக்குப்‌ பஸ்ஸில்‌ எழுதப்பட்டிருந்த அந்த வாசகம்‌
என்‌ கண்ணில்‌ பட்டது.

“புகைப்‌ பிடிக்காதீர்‌! மீறினால்‌ கண்டக்டர்‌ மற்றும்‌ நடத்துனரால்‌ இறக்கி
விடப்படுவீர்‌….!

“தாத்தா… சுருட்டு பிடிக்கணும்‌ போல்‌ தோணுதா…?”

“ஆமாண்டா ராஜா…. வாய்‌ மசமசன்னு வருதுடா…”

“சும்மா குடிங்க தாத்தா… யார்‌ சொன்னாலும்‌ தூரப்‌ போட்டுடாதீங்க…”

தாத்தா மடியில்‌ இருந்த சுருட்டை எடுத்துக்‌ கொடுத்தேன்‌. தாத்தா தனது
பொக்கு வாயில்‌ சுருட்டை கம்பீரமாக வைத்துப்‌ தீப்‌பட்டியை எடுத்து பத்த
வைத்தார்‌.

புகை குப்‌… குப்‌… குப்‌… ரெயிலில்‌ புகை போவது போல…

பக்கத்திலிருக்கும்‌ அன்பர்கள்‌, நண்பர்கள்‌, பரியவர்கள்‌, தாய்மார்கள்‌
அனைவரும்‌ “ஆ… ஊ…’ன்னு கத்தல்‌!

“யோவ்‌ பெரியவரே! சுருட்டை தூரே எறியுமய்யா…”

“யோவ்‌ குமட்டல்‌ வருது…. தூரே போடுமய்யா….”

“யோவ்‌ பெரிசு…. எசான்னா கேளுமய்யா… பஸ்ல சுருட்டு புடிக்கக்‌
கூடாது…”

இப்படி பல குரல்கள்‌ ஒரே சமயத்தில்‌ எழும்பின. தாத்தா… அசறவில்லை…
தொடர்ந்து கப்‌… கப்‌… கப்‌…

“டிரைவர்‌! பஸ்ஸை நிறுத்தி, அந்தப்‌ எபரியவரை கீழே இறக்கி
விடுமய்யா…” இது பஸ்ஸில்‌ இருந்த பஞ்சாயத்து தலைவரின்‌ கட்டளை.

பஸ்‌ நிறுத்தப்பட்டது. வலுப்பிடியா தாத்தா… கீழே இறக்கிவிடப்பட்டார்‌.
நானும்‌ இறங்கிக்‌ கொண்டேன்‌.

அதுதான்‌ நாலு முக்கு சந்தி!

பஸ்‌ முணுமுணுத்துக்‌ கொண்டே போனது. நான்‌ மெதுவா சிரித்துக்‌
கொண்டேன்‌.