Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Tamil Siru Kathaigal | தங்கச்சங்கிலி – மகள்‌

Tamil siru kathaigal-thangachankili-magal

4. தங்கச்சங்கிலி

மகள்‌ ஜினா அருகில்‌ வந்து

 

உட்கார்ந்தாள்‌.

“அப்பா…”
ட்ட ர

என்னம்மா…

“திருவிழாவிற்கு இன்னும்‌ இரண்டூ வாரம்‌
தான்‌ இருக்கு…”

“ஆமாம்‌…”

‘நித்யா வீட்டுல எல்லாம்‌ டவுனுக்கு போய்‌ ஜவுளி எடுத்திட்டு வந்திட்டாங்க
அப்பா…”

மகளின்‌ எண்ணம்‌ அவருக்கு புரிந்தது.

நாம எப்போ ஐவுளி எடுக்கப்‌ போறோம்‌?

“அது ஒண்ணுதான்‌ குறை…” அடுக்களையில்‌ இருந்து அம்மா
மரியம்மாள்‌ காபியை ஆற்றிக்‌ கொண்டு வந்தாள்‌.

“போம்மா…. நான்‌ அப்பாவிடம்‌ கேட்கிறேன்‌…”

“திங்கிற சோத்துக்கே வழியில்லை… உங்களுக்கு ஜவுளி கேட்குதாக்கும்‌…
இன்னாங்க… இந்த காப்பியை ஊத்திட்டு… சீக்கீரம்‌ தோட்டத்துக்கு போங்க…”

ரெஜினாவின்‌ இளந்தளிர்‌ முகம்‌ வாடியது.

மகளின்‌ வாடிய முகத்தை பார்த்ததும்‌ மனம்‌ நொந்தார்‌ மரியராஜ்‌. மகளின்‌
தலையை கோதீ விட்டுக்‌ காண்டே, “நாமும்‌ டவுனுக்கு போய்‌
ஜவுளி எடுக்கலாமா… வாழைக்காய்‌ வியாபாரி தங்கராஜ்‌ கிட்ட பணம்‌

கேட்டிருக்கேன்‌. கிடைச்சதும்‌ போகலாம்‌…” என்றார்‌

“தங்கராஜ்‌ அண்ணன்‌ மெட்ராஸ்க்கு போய்‌ பத்து நாளாவது…”என்ற

மரியம்மாள்‌, “என்னங்க…. உங்க பால்ய நண்பர்‌… தேவயிரக்கம்‌
எராம்ப வசதியா… பரிய கம்‌எபனிலயல்லாம்‌ வவளியூர்ல

வைச்சிருக்காகளாம்லே….”

“அதுக்கு இப்போ….என்ன?”

“அவுக ஊருக்கு வந்திருக்காகளாம்‌… அவுககிட்ட கடனா கொஞ்சம்‌
பணம்‌ கேட்டூப்பாருங்களேன்‌…”’

“கடனா… எதுக்கு?”

“எதுக்கா…. உங்க பொண்ணு கழுத்துல… காதுல…. ஒரு பொட்டுத்‌
தங்கம்‌ இருக்குதா என்ன? அவுககிட்ட கடன்‌ கெட்டா என்ன?அவுககிட்ட
கடன்‌ வாங்கினா இரண்டு சவரன்ல ஒரு தங்கச்‌ சங்கிலி வாங்கலாமுல்ல…”

“பிறகு கடனை…. எப்படி அடைப்பே…”

“மாசாமாசம்‌…. இரண்டாயிரம்‌ கொடுத்துடுவோம்‌…”

“பத்து வருசத்துக்கு முன்னால நடந்ததை நினைச்சிப்‌ பார்த்தியா… அவன
எப்படி அவமானப்படுத்தினே… அவன்கிட்ட எந்த மூஞ்சியை வைச்சிக்கிட்டு
கடன்‌ கேட்கிறது?”

“நான்‌ அப்படி என்ன அவமானப்படுத்திட்டேன்‌… என்‌ இரண்டு சவரன்‌
தங்கச்சங்கிலி காணாம போயிடுச்சு… உங்க நண்பர்தான்‌ உங்களை தேடி
வந்திட்டு போனாக என்றேன்‌…”

“இதை அவன்‌ முன்னாலேயே… சொல்லி அவன அவமானப்படுத்தினே…
அந்த தங்கச்சங்கிலியை அவனா எடுத்தான்‌?”

“யார்‌ எடத்தாங்கன்னு தெரியாவிட்டாலும்‌ என்‌ தங்கச்சங்கிலி காணம
போனது உண்மைதானே…. அந்த சங்கிலி மட்டும்‌ இப்போ இருந்திச்சுன்னா…

எம்‌ மகள்‌ கழுத்து இப்படி சும்மா இருக்குமா?” என்றாள்‌, ஆதங்கமாய்‌.

கார்‌ சத்தம்‌ வாசலில்‌ கேட்டது.

“இந்த பாருங்க… உங்க சிநேகிதர்‌ தான்‌ வாராக… சமயம்‌ பார்த்து

பேசுங்க…” என்றவாறு அடுக்களைக்குள்‌ சென்றாள்‌.

“டேய்‌.. மரியராஜ்‌ எப்படிடா… இருக்கே…” வீட்டுக்குள்‌ நுழைந்தார்‌,
தேவயிரக்கம்‌.

“டேய்‌…வாடா….எப்போ வந்தே? நல்லாயிருக்கிறீயா…” மரியராஜீக்கும்‌
நண்பனை எதிர்பாராமல்‌ பார்க்க முடிந்த மகிழ்ச்சி.

“நல்லா இருக்கேன்டா…” இருவருவரும்‌ கட்டிப்‌ பிடித்துக்‌ காண்டார்கள்‌.

“அதுசரி… இது யாரு உன்‌ மகளா?”

“ஆமாப்பா…”

“ஏம்மா… இப்படி வா. உன்‌ பேரேன்னம்மா…?”

“ஜினா…”

“எதுவரை படிச்சிருக்கே?”

“பனிஷண்டு…”

“அதுக்குப்புறம்‌ படிக்கலையா… சரி எத்தனை மார்க்‌ வாங்கினே…”

“ஆயிரத்து நூத்தி எட்டு”

“அடேயப்பா.. இத்தனை மார்க்‌ வாங்கியிருக்கே.. பின்னே ஏன்‌
படிக்கலை…?”

அப்பாவை பார்த்தாள்‌.

“சரி… அடுத்த வருஷம்‌ நீ மேற்கொண்டு படிக்கிற… நீ என்ன படிச்சாலும்‌
என்‌ செலவு தான்‌… அது மட்டுமல்ல… உன்‌ கல்யாண செலவும்‌ இந்த
சித்தப்பாவோடது தான்‌ என்ற தேவயிரக்கம்‌”.

தேனாக பாய்ந்த வார்த்தைகளை கேட்டுக்‌ கொண்டே மரியம்மாள்‌ காபி
கொண்டு வந்தாள்‌.

“வாங்கண்ணே… நல்லாயிருக்கீங்களா? இந்தாங்க காபி…”

“நல்லா இருக்கேம்மா…” காபியை வாங்கி பருகினார்‌.

பையை திறந்து ஒரு இரண்டூ சவரன்‌ தங்கச்‌ சங்கிலியை எடுத்து
ரெஜினா விடம்‌ நீட்டினார்‌.

இந்தாம்மா… இதை போட்டுக்கோ…”

அவள்‌ தீரும்பி அப்பாவை பார்த்தாள்‌.

“ஏண்டா… ‘இஜதல்லாம்‌…” என்று இழுத்தார்‌ மரியராஜ்‌.

“நீ சும்மா… இருடா… என்றவர்‌, ஏரஜினா பக்கம்‌ திரும்பி, சித்தப்பா
“தாரேன்‌. வாங்கிக்கோம்மா…”

கதுயங்கி… தயங்கி… வாங்கினாள்‌ ஏரஜினா.

பர்ஸை திறந்து பத்தாயிரம்‌ ரூபாயை எடுத்து ஏரஜினாவிடம்‌ நீட்டினார்‌.

“டவுனுக்கு போய்‌… தீருவிழாவுக்கு ஜவுளி எடுத்துக்கோ… இனி என்ன
செலவுன்னாலும்‌ சித்தப்பாவைத்தான்‌ கேட்கணும்‌… ஒதரிஞ்சுதா…”

“சரி ன்னு திகைப்பு மாறாமல்‌ தலையாட்டினாள்‌”.

“சரி.. நான்‌ போயிட்டு அப்புறம்‌ வாரேன்‌…”

தேவயிரக்கத்தை கார்‌ வரை வழியனுப்ப போனார்‌ மரியராஜ்‌.

“இந்த மனுஷனைப்‌ போய்‌ நான்‌ சந்தேகப்பட்டேனே.. என்ன
எசருப்பாலத்தான்‌ அடிக்கனும்‌” என்ற முணுமுணுத்துக்‌ கொண்டே
மரியம்மாள்‌ தன்‌ தலையிலே குட்டிக்‌ கொண்டாள்‌.

பத்து வருஷத்துக்கு முன்னால்‌ எடுத்து இரண்டூ சவரன்‌ செயினுக்கு
தான்‌ தேவயிரக்கம்‌ பரிகாரம்‌ தேடிக்‌ கொண்டிருக்கிறார்‌ என்பது அவர்‌
மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மை!

 

Exit mobile version