குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அருள் உடைமை
குறள் எண் : 248
குறள்: பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
விளக்கம் : பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Arul udaimai
kural en: 248
Kural: Porularrar puppa rorukal arularrar
arrarmar ratal aritu.
Vilakkam: Porul illatavar oru kalattil valam perru vilankuvar, arul illatavar valkkaiyin payam arravare avar oru kalattilum cirantu vilankutal illai.