குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
குறள் எண் : 1227
குறள் : காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
விளக்கம் : காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Polutu kantu irankal
kural en: 1227
Kural: Kalai arumpip pakalellam potaki
malai malarumin noy.
Vilakkam: Katal tunpamakiya ippu, kalaiyil arumpukiratu; pakalil mutirkiratu; malaippolutil malarntu vitukiratu.