குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்
குறள் எண் : 1243
குறள் : இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
விளக்கம் : நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Nencotu kilattal
kural en: 1243
Kural: Iruntulli enparital nence parintullal
paitalnoy ceytarkan il.
Vilakkam: Nence (ennutan) iruntu avarai ninaintu varuntuvatu en? Intat tunpanoyai untakkiyavaritam ivvaru anpu kontu ninaikkum tanmai illaiye!