குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : குறிப்பு அறிவுறுத்தல்
குறள் எண் : 1271
குறள் : கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
விளக்கம் : நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Kurippu arivuruttal
kural en: 1271
Kural: Karappinun kaiyikan tollanin unkan
uraikkal uruvaton runtu.
Vilakkam: Ni collatu maraittalum, maraikka utanpatamal, un mai tittap perra kankale enakkuc colla virumpum ceyti onru untu.