குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
குறள் எண் : 1281
குறள் : உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
விளக்கம் : நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Punarcci vithumpal
kural en: 1281
Kural: Ullak kalittalum kana makiltalum
kallukkil kamattir kundu.
Vilakkam: Ninaitta alavile kalippataitalum kanta alavile makilchi ataitalum akiya inta iruvakai tanmaiyum kallukku illai; kamattirku undu.