குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : ஊடல் உவகை
குறள் எண் : 1322
குறள் : ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
விளக்கம் : ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Utal uvakai
kural en: 1322
Kural: Utalin tonrum cirutuni nallali
vatinum patu perum.
Vilakkam: Utal karanamaka ennitam tonrum ciru tunpattinal avar enmitu kattum peranpu vatinalum perumai perum.