குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : ஊடல் உவகை
குறள் எண் : 1329
குறள் : ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
விளக்கம் : காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Utal uvakai
kural en: 1329
Kural: Utuka manno oliyilai yamirappa
nituka manno ira.
Vilakkam: Katali innum utuvalaka, anta utalait tanikkum poruttu yam irantu nirkumaru irakkalam innum nittippataka.