குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினைத்திட்பம்
குறள் எண் : 663
குறள்: கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
விளக்கம் : செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinaittitpam
kural en: 663
Kural: Kataikkotkac ceytakka tanmai itaikkotkin
erra viluman tarum.
Vilakkam: Ceyyum ceyalai mutivil velippatum patiyaka ceyyum takutiye anmaiyakum, itaiyil velipattal ninkata tunpattaik kotukkum.