குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அமைச்சியல்
அதிகாரம் : வினை செயல்வகை
குறள் எண் : 674
குறள் : வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
விளக்கம் : செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Amaicciyal
athikaram: Vinai ceyalvakai
kural en: 674
Kural: Vinaipakai yenrirantin eccam ninaiyunkal
tiyeccam polat terum.
Vilakkam: Ceyyattotankiyac ceyal, konta pakai enru ivvirantin kurai arayntu parttal, tiyin kuraipol teriyamal valarntu ketukkum.