குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : பொச்சாவாமை
குறள் எண் : 538
குறள்: புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
விளக்கம் : உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Poccavamai
kural en: 538
Kural: Pukalntavai porric ceyalventun ceyya
tikalntark kelumaiyum il.
Vilakkam: Uyarntor pukalntu connavarrai virumpik kataippitikka ventum. Kataippitikka marantavarkku elu pirappilum nanmai illai.