குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : ஊக்கம் உடைமை
குறள் எண் : 600
குறள்: உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு.
விளக்கம் : ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram: Ukkam utaimai
kural en: 600
Kural: Uramoruvar kulla verukkaiyah tillar
maramakka latale veru.
Vilakkam: Ukka mikutiye oruvanukkut tinniya arivu. Avvukkam illatavar vativattal makkal; manattalo verum marame.