குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : அரசியல்
அதிகாரம் : கல்வி
குறள் எண் : 397
குறள்: யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
விளக்கம் : கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும்
ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?
Kural pal: Porutpal
kural iyal: Araciyal
atikaram : Kalvi
kural en: 397
Kural : Yatanum natamal uramal ennoruvaṉ
cantunaiyun kallata varu.
Viḷakkam: Karravanukku ella natum conta natam; ella urum conta uram. Itanait terintum oruvaṉ irakkum varai kutap
patikkamal iruppatu en?