குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : இரவு
குறள் எண் : 1051
குறள் : இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
விளக்கம் : இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Iravu
kural en: 1051
Kural: Irakka irattakkark kanin karappin
avarpali tampali anru.
Vilakkam: Irantu ketka takkavaraik kantal avanitam irakka ventum, avar illai enru olipparanal atu avarkku pali, tamakku pali anru.