குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : கயமை
குறள் எண் : 1077
குறள் : ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
விளக்கம் : தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Kayamai
kural en: 1077
Kural: Irnkai vitirar kayavar kotirutaikkum
kunkaiyar alla tavarkku.
Vilakkam: Tataiyai utaikkum murukkiya kai illatavarkkuk kayavar, tam untu kaluviya irak kaiyaikkuta utaramattar.