குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : சான்றாண்மை
குறள் எண் : 989
குறள் : ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
விளக்கம் : சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Canranmai
kural en: 989
Kural: Uli peyarinum tampeyarar canranmaikku
ali enappatu var.
Vilakkam: Canranmai enappatum katalukkuk karai enappatum canror, kalam marinalum tam maramattar.