குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கள் உண்ணாமை
குறள் எண் : 929
குறள் : களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
விளக்கம் : கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kal unnamai
kural en: 929
Kural: Kalittanaik karanam kattutal kilnirk
kulittanait titturii arru.
Vilakkam: Kalluntu mayankinavanaik karanam katti telivittal, nirin kil mulkina oruvanait tivilakku kontu tetinar ponratu.